ஈரான் அதிபர் மசூத் பெஜெஸ்கியான் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தி, மேற்காசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை அவசியம் என்பதை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அழைப்பின் போது, மேற்காசிய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து அதிபர் பெஜெஸ்கியான் பிரதமர் மோடிக்கு விளக்கினார்.
இதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்ததுடன், அனைத்து பிரச்னைகளுக்கும் அமைதி மற்றும் தூதரக வழிமுறைகளின் மூலம், பேச்சுவார்த்தை வழியே தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்தார்.
மேலும், பிராந்தியத்தில் நிலைத்தன்மையை உறுதி செய்ய தொடர்ச்சியான முயற்சிகள் தேவை என கூறிய அவர், குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்து நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.





