செஸ்டர்-லீ-ஸ்டீரிட் நகரில் நடந்த இங்கிலாந்து-இந்தியா முதல் டி20 போட்டி, இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 189 ரன் எடுத்த பிறகு மழை காரணமாக கைவிடப்பட்டது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய ‘லெவன்’ அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெறவில்லை. அதே நேரத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய் மீண்டும் அணிக்கு திரும்பினர்.
இன்னிங்ஸ் தொடக்கத்தில் சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆனார்; இஷான் கிஷான் ரன்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 20 பந்தில் அரைசதம் எட்டினார்; மறுமுனையில் ஐயரும் தொடர்ந்து பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.
அபிஷேக் 24 பந்தில் 59 ரன் எடுத்த நிலையில் சாம் கரண் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். ஐயர் 68 ரன்னில் சாகிப் மஹமூத் பந்தில் அவுட் ஆனார். கடைசியில் ஷிவம் துபே 21 பந்தில் 42 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். பின்னர் இங்கிலாந்தின் பேட்டிங் தொடங்குவதில் மழை தாமதம் ஏற்படுத்திய நிலையில், மழை நிற்காததால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.





