உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் கைப்பை மட்டும் கொண்டு பயணிக்க விரும்பும் பயணிகளுக்காக ‘இண்டிகோ லைட்’ என்ற புதிய குறைந்த கட்டண திட்டத்தை இண்டிகோ அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, எகானமி (சாதாரண) வகுப்பு பயணிகளில் குறைந்த பைகளுடன் பயணித்து, தேவையான சேவைகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்த விரும்புவோரைக் கவனத்தில் கொண்டு இந்த திட்டத்தை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளது.

வழக்கமான எகானமி கட்டணத்தில் பொதுவாக 7 கிலோ வரை கேபின் (கைப்பை) லக்கேஜ் மற்றும் 15 முதல் 20 கிலோ வரை செக்-இன் லக்கேஜ் அனுமதி வழங்கப்படும். ஆனால் ‘லைட்’ கட்டணத்தில் 7 கிலோ வரை கைப்பை மட்டும் எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு அடிப்படை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

சந்தை தேவைகளுக்கு ஏற்ப சேவைகளை மாற்றியமைத்து, விமானப் பயணத்தை குறைந்த செலவில் வழங்குவதே நோக்கம் என இண்டிகோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும் கைப்பை மட்டும் எடுத்துச் செல்லும் பயணிகளுக்கான கட்டணத்தை ஏற்கனவே குறைத்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.