மத்திய பிரதேசம், குஜராத், பீஹார் மாநிலங்களில் காலியாக உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு ஜூலை 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட தொகுதிகள் மத்திய பிரதேசத்தின் தாட்டியா, குஜராத்தின் மஞ்சள்பூர் மற்றும் பீஹாரின் பங்கிப்பூர் ஆகியவை. இத்தொகுதிகள் காலியானதாக முன்பே அறிவிக்கப்பட்டிருந்தன.
வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, கரூர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. ஆனால் இத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை.
இந்த காலியிடங்கள் தொடர்பான தகவல்களை சட்டசபை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.





