அட்லாண்டா: பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட்-32 போட்டியில் காங்கோவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி, இங்கிலாந்து அணி ரவுண்ட்-16 சுற்றுக்கு முன்னேறியது.
ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் காங்கோ வீரர் பிரையன் சிபெங்கா கோல் அடித்து அணிக்கு 1-0 முன்னிலை பெற்றுத் தந்தார். இதனால் இங்கிலாந்து அதிர்ச்சி அடைந்தாலும், தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை அதிகரித்தது. ஆனால் முதல் பாதி முடிவில் காங்கோவே முன்னிலையில் இருந்தது.
நீண்ட நேரம் கோல் கிடைக்காமல் திணறிய நிலையில், 75வது நிமிடத்தில் ஹாரி கேன் கோல் அடித்து 1-1 என சமநிலையை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து 86வது நிமிடத்தில் மீண்டும் கேன் கோல் அடித்து இங்கிலாந்தை முன்னிலைக்கு கொண்டு சென்றார். இறுதியில் இரு அணிகளின் முயற்சிகளும் பலனளிக்காததால், இங்கிலாந்து 2-1 என வென்று அடுத்த சுற்றுக்கு சென்றது; காங்கோ அணி தொடரிலிருந்து வெளியேறியது.





