புதுடில்லியில் புதன்கிழமை, ஜப்பான் பிரதமர் சனாயே டகாய்ச்சியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இந்தியா–ஜப்பான் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினார்.

மோடியின் அழைப்பை ஏற்று டகாய்ச்சி மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அந்நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் தங்களது அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தினர். அதன் பின்னர் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன.

டில்லியில் நடைபெறும் 16வது இந்தியா–ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் டகாய்ச்சி பங்கேற்க உள்ளார். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உறவை விரிவுபடுத்துவது குறித்து இரு நாடுகளின் அமைச்சர்கள் பேச்சு நடத்த உள்ளனர்.