வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாக சென்னை வானிலை மையம் புதன்கிழமை தெரிவித்தது.
இந்த அமைப்பு அடுத்த 2–3 நாட்களில் மேலும் வலுப்பெறக்கூடும் என்றும், இதன் தாக்கமாக தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜூலை 3-ஆம் தேதி கோவை மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 4-ஆம் தேதி கோவை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மேலும், ஜூலை 2 முதல் ஜூலை 8 வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது. மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45–55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





