ஒரு கிராமத்தில் உள்ள பள்ளியின் செயல்பாடு குறித்து அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அந்த பள்ளியில் தற்போது ஒரே மாணவி மட்டுமே படித்து வருவதாக அவர்கள் கூறினர்.
கிராம மக்கள் கூறுகையில், பள்ளியில் தலைமை ஆசிரியை மேரி மற்றும் ஜீவா என இரு ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்கள் சம்பளம் தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர். தலைமை ஆசிரியைக்கு ரூ.1.30 லட்சமும், ஜீவாவுக்கு ரூ.80,000-மும் வழங்கப்படுவதாக கூறினர்.
மேலும், பள்ளி சமையல் உதவியாளருக்கு ரூ.7,000 சம்பளம் வழங்கப்படுவதாகவும், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் கரும்பலகையில் உள்ள தேதியை மாற்றுவது போன்ற அடிப்படை பணிகளுக்கே நேரமில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
கடந்த ஆண்டு பள்ளியில் ஐந்து மாணவர்கள் இருந்த நிலையில், தற்போது ஒரே மாணவி மட்டுமே இருப்பதாகவும், இந்த நிலை குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.





