புதுடில்லி: மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
1989 ஆம் ஆண்டு ஐஎப்எஸ் (Indian Foreign Service) பிரிவைச் சேர்ந்த விக்ரம் மிஸ்ரி, 2024 முதல் வெளியுறவுச் செயலாளராக பணியாற்றி வருகிறார். அவரது தற்போதைய பதவிக்காலம் ஜூலை 14 அன்று முடிவடைய இருந்தது.
அமைச்சரவை நியமனக் குழு, அடிப்படை விதி 56(d)ன் கீழ் இந்த நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 2027 ஜூலை 14 வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை அவர் பதவியில் தொடருவார்.
வெளியுறவுச் செயலாளராக பொறுப்பேற்கும் முன்பு, அவர் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக இருந்தார். மேலும் ஐ.கே. குஜ்ரால், மன்மோகன் சிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய மூன்று பிரதமர்களுக்கும் தனிச் செயலாளராக பணியாற்றியுள்ளார்; வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.





