தமிழக கவர்னர் ஆர்.என். அர்லேக்கர், மக்கள் தங்கள் பிரச்னைகளை லோக் பவனில் நேரடியாக தெரிவிக்கலாம்; தயக்கமின்றி முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

சென்னை கிண்டி ராஜ் பவனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண மாநில அரசுடன் இணைந்து செயல்படுவேன் என்று தெரிவித்தார்.

தேவைப்பட்டால், பிரச்னைகளுக்கு தீர்வு காணுமாறு முதல்வரிடம் எடுத்துரைப்பேன் என்றும், கவர்னரிடமும் அரசிடமும் மக்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

மேலும், சமூகத்தில் சமூக நல்லிணக்கம் குறைந்துவிட்டது என்பது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது என குறிப்பிட்ட அவர், மக்கள் பிரச்னைகளுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.