முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்பான குட்கா வழக்கின் விசாரணையை 12 வாரங்களுக்குள் முடிக்க சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வசதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறி, சி.பி.ஐ. இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. இதில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட 26 பேர் குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

மேலும் முன்னாள் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் எஸ். ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய–மாநில உயர் அதிகாரிகளும் வழக்கில் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், வழக்கில் தொடர்புடைய சிலர் தங்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை அந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, சி.விஜயபாஸ்கர் தொடர்பான குட்கா வழக்கின் விசாரணையை 12 வாரங்களுக்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.