திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 4) குடும்பத்துடன் லண்டன் பயணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார். சென்னை–துபாய் விமானத்தில் சென்று, அங்கிருந்து லண்டன் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் திமுகவினர் திரண்டு வந்து அவருக்கு உற்சாகமாக வழியனுப்பினர். இந்தப் பயணம் குடும்ப நிகழ்வை முன்னிட்டு மேற்கொள்ளப்படுவதாகவும், பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஸ்டாலின் லண்டன் செல்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில், தாம் வெளிநாட்டில் சுமார் இரண்டு வாரங்கள் இருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், தன் மனம் அறிவாலயத்தில்தான் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதே கடிதத்தில், நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை குறிப்பிட்டு, சில கட்சிகள் ஒரு தோல்வியைக்கூட தாக்குப்பிடிக்க முடியாத நிலை இருப்பதாகவும், திமுகவைப் போல அமைப்பு ரீதியான பலம் கொண்ட கட்சி இந்தியாவில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.