மஹாராஷ்டிரா மற்றும் புதுடில்லி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்வதால், சாலை போக்குவரத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வான்வழி பயணத்தை திட்டமிடும் பயணிகள் தங்களின் பயணத் திட்டங்களை முன்கூட்டியே இணையத்தில் சரிபார்த்து, கடைசி நேர மாற்றங்களை கவனிக்க வேண்டும் என்று விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
குறிப்பாக மும்பை மற்றும் டில்லி செல்லும்/வரும் பயணிகள், விமான நிலையம் புறப்படும் முன் தங்கள் விமானத்தின் இறுதி நிலவர அறிவிப்புகளை இணையத்தில் சரிபார்க்க வேண்டும் என்று ஏர் இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வானிலை காரணமாக பாதிப்பு ஏற்பட்டால், விமான நிலையத்தில் உள்ள குழுவினர் உதவ தயாராக இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன், டில்லியில் கனமழை காரணமாக 10 உள்நாட்டு மற்றும் 5 சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.





