டெஹ்ரான்: அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் ஆட்சியாளரும் மதகுருவுமான கமேனியின் இறுதிச்சடங்கில், அவரது மகன் மொஜ்தபா கமேனி பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதாக செய்தி கூறுகிறது. இதனைத் தொடர்ந்து ஈரானின் புதிய ஆட்சியாளராக மொஜ்தபா நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் பொதுமக்கள் முன்னிலையில் தோன்றாமல், அவரது பெயரில் மட்டும் அறிக்கைகள் வெளியானதாகவும் குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களால் இறுதிச்சடங்கு இதுவரை நடைபெறவில்லை. தற்போது அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன; பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாக நடைபெறும் இறுதிச்சடங்கு பிரார்த்தனையிலும் மொஜ்தபா பங்கேற்கவில்லை. மாறாக, அவரது சகோதரர்கள் முஸ்தபா, மேசம், மசூத் ஆகியோர் மட்டும் பங்கேற்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.





