வாஷிங்டன்: ஈரானின் மதத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் காணப்படும் அழுகை உண்மையல்லாமல் ‘போலி கண்ணீர்’ ஆக இருக்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப்படை தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அவரது இறுதிச்சடங்கு நேற்று தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப், இறுதிச்சடங்கில் பலர் அழுவதைக் கண்டு ஆச்சரியமடைந்ததாகவும், மக்கள் கமேனியை வெறுப்பார்கள் என தான் நினைத்ததாகவும் கூறினார். அதனால் அந்த அழுகை ‘போலி’யாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கமேனி கொல்லப்பட்டதையடுத்து அணுசக்தி தொடர்பான ஒப்பந்தம் வேண்டும் என கெஞ்சியதாகவும், இறுதிச்சடங்கு முடியும் வரை ஒரு வாரத்திற்கு பேச்சுவார்த்தையை தள்ளிவைக்க அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக் கொண்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார். அந்த காலகட்டத்தில் எந்தத் தாக்குதலும் நடக்காது என்றும் அவர் கூறினார்.





