தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவர் பிடிபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்டவர் கிருஷ்ணா என அடையாளம் காணப்பட்டுள்ளார். முன்னதாக கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி திருநாவுக்கரசுவின் கார் டிரைவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை திருவல்லிக்கேணி போலீசார் மேற்கொண்டதாகவும், விசாரணை தொடரும் நிலையில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




