உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், ஹிந்துக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற முயன்றதாக கூறப்படும் வழக்கில் 5 பெண்கள் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜரவுடா கிராமத்தில் மதமாற்ற முயற்சி நடப்பதாக ஹிந்து அமைப்புகள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சோதனையில் அவர்களிடமிருந்து மூன்று டைரிகள், மத நூல்கள் மற்றும் ஆறு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், மதமாற்றப் பிரசாரக் கூட்டத்துக்கு இடம் வழங்கியதாக கூறப்படும் ரஷீத் மற்றும் மோனிஸ் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.




