மாமல்லபுரம் அருகே வட நெம்மேலியில் செயல்படுத்தப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளை முதல்வர் விஜய் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். இந்த திட்டம் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.
நெம்மேலியில் ஏற்கெனவே கடல்நீர் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், வட நெம்மேலியில் தினமும் 40 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் திட்டம் தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின்போது முதல்வர் விஜய் பேட்டரி வாகனத்தில் திட்டப்பகுதியை சுற்றிப் பார்த்தார். திட்டத்தின் செயல்பாடு, உற்பத்தித் திறன் மற்றும் விரிவாக்கப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், முதல் அலகு மற்றும் இரண்டாவது அலகு என இரண்டு அலகுகளை ஆய்வு செய்து, அவற்றின் நிலவரம் குறித்து தகவல்களை பெற்றார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.




