கர்நாடகாவைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி ஒருவர், திருமலை திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாளை தரிசிக்க திருமலை மலைப்பாதையை நடந்தே கடந்து சென்றார்.
நவ நீதம்மா என அறியப்படும் அவர், குடும்பத்தினருடன் அலிபிரி நடைபாதை வழியாக பயணித்தார். சுமார் 9 கி.மீ. நீளமுள்ள இந்த பாதையில் 3,550 படிக்கட்டுகள் உள்ளன.
அனைத்து படிகளையும் அவர் நடந்தே ஏறிச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கவனம் பெற்றன.
இதையடுத்து கோவில் நிர்வாகம், வி.ஐ.பி.க்களுக்கான சிறப்பு “திவ்ய தரிசனம்” மூலம் நேற்று காலை அவர் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்வை அறிந்த ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, வயது பக்திக்கு தடையல்ல எனக் குறிப்பிட்டு, திருமலைக்கு நடந்தே சென்ற மூதாட்டியின் முயற்சியை சமூக வலைதளப் பதிவில் பாராட்டினார்.





