அமெரிக்காவின் டல்லாஸில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘ரவுண்ட்-16’ நாக்-அவுட் போட்டியில், ஸ்பெயின் அணி போர்ச்சுகலை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயன்றன. முதல் பாதியில் கடுமையான மோதல் இருந்தாலும், கோல் எதுவும் பதிவாகவில்லை.
இரண்டாம் பாதியிலும் ஆட்டம் சமநிலையிலேயே நீடித்ததால், போட்டி கூடுதல் நேரத்திற்கு செல்லலாம் என்ற எதிர்பார்ப்பு உருவானது.
ஆனால் கூடுதல் நேரத்தில் (90+1வது நிமிடம்) ஸ்பெயினுக்கு கிடைத்த ப்ரீ-கிக்கில் பெரான் டோரஸ் கொடுத்த பாஸை பயன்படுத்திய மைக்கேல் மெரினோ, பந்தை கோல் போஸ்ட்டுக்குள் திணித்தார். இதுவே வெற்றிக் கோலாக அமைந்தது.
கடைசி நிமிட அதிர்ச்சியால் போர்ச்சுகல் அணி நிலைகுலைந்தது. உலகக் கோப்பை கனவு முடிந்ததை எண்ணி கிறிஸ்டியானோ ரொனால்டோ உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறினார்.





