ரூ.1,000 கோடி முதலீட்டில் ஹிட்டாச்சி நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொண்டதாக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் போரூரில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தையும், செங்கல்பட்டில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்கத் திட்டத்தையும் உள்ளடக்கியதாக கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் 1,000 உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு தெரிவித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. நிகழ்வில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் சாய்குமார், ஹிட்டாச்சி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வேணு நுகரி, தலைமை வளர்ச்சி அலுவலர் கார்த்திக் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





