சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து தங்கள் கட்சி வெளியேறவில்லை என்று விளக்கம் அளித்தார். திமுக தரப்பே ‘விசிக கூட்டணியில் இல்லை’ என்று கூறியதாகவும், தாங்களாக விலகவில்லை என்றும் அவர் கூறினார்.
சட்டசபை தேர்தல் முடிவுகளை குறிப்பிட்டு, மாற்று கூட்டணியில் இருந்த விசிகக்கு, தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) தனிப்பெரும் கட்சியாக வென்றது எப்படி மகிழ்ச்சியை தரும் என்று அவர் கேள்வி எழுப்பினார். அதே நேரத்தில், அ.தி.மு.க. போன்ற கட்சிகளை தவிர்த்து, தங்களை மதச்சார்பற்ற சக்தியாகக் கருதி ஆதரவு கேட்டது த.வெ.க. எடுத்த துணிச்சலான முடிவு என்றும் அவர் தெரிவித்தார்.
த.வெ.க. கூட்டணியில் விசிக இருப்பதாக தாம் அறிவிக்கவில்லை என்றும், இனி த.வெ.க. தலைமையில் கூட்டணி உறுதியாக அமைந்தால் அந்த கூட்டணியில் இடம்பெறுவோம் என்றும் திருமாவளவன் கூறினார்.
மேலும், ‘குதிரை பேரம்’ விவகாரத்தில் கவர்னருக்கு அதிகாரம் இருந்தால் தலையிட வேண்டும் என்றும் அவர் பேசினார்.





