வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெறும் பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட்-16 நாக்-அவுட் போட்டியில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா 3-2 என்ற கணக்கில் எகிப்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே எகிப்து கடும் சவால் அளித்தது. 15வது நிமிடத்தில் யாசர் இப்ராஹிம் கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். முதல் பாதி முடிவில் எகிப்து 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் 67வது நிமிடத்தில் முஸ்தபா ஜிகோ கோல் அடிக்க, எகிப்து 2-0 என முன்னிலை பெற்றது.

கடைசி நேரத்தில் அர்ஜென்டினா தாக்குதல் வேகம் அதிகரித்தது. 79வது நிமிடத்தில் கிறிஸ்டியன் ரொமேரோ கோல் அடித்து வித்தியாசத்தை குறைத்து ஆட்டத்தை திருப்பினார்.

83வது நிமிடத்தில் கேப்டன் லியோனல் மெஸ்சி கோல் அடித்து 2-2 என சமனாக்கினார். கூடுதல் நேரத்தில் (90+3) என்சோ பெர்னாண்டஸ் கோல் கீப்பரை ஏமாற்றி வெற்றி கோல் அடிக்க, அர்ஜென்டினா 3-2 என த்ரில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. சிறப்பாகப் போராடிய எகிப்து கடைசி நிமிட தாக்குதலை சமாளிக்க முடியாமல் தொடரிலிருந்து வெளியேறியது.