ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) முடிவுகளை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்கால தடை விதித்தது.
பொதுப்பிரிவினருக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை 60% இலிருந்து 50% ஆக குறைக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளதால் அவகாசம் தேவை என தமிழக அரசு தரப்பு தெரிவித்தது.
இதையடுத்து, அரசின் முடிவை வரும் ஜூலை 24க்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும், அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்றும் கூறி நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.





