இந்தோனேஷியாவின் புகழ்பெற்ற ஹிந்து கோவில் வளாகமான பிராம்பனன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார். இந்த அனுபவத்தை அவர் “பெரும் பாக்கியம்” என்றும் “மிக மகிழ்ச்சியானது” என்றும் குறிப்பிட்டார்.

வழிபாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மோடி, சிவபெருமானுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்புகள் அடிக்கடி கிடைப்பது தன் நற்பேறு என தெரிவித்தார். குஜராத் மாநிலம் வத்நகரில் பிறந்ததை நினைவுகூர்ந்து, ஹட்கேஷ்வர் மகாதேவர் கோவிலை முக்கியமான புனிதத் தலமாகவும் கூறினார்.

மேலும் குஜராத்தில் உள்ள சோமநாதர் கோவில் பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் முதலாவதாகத் திகழ்வதாகவும், காசி விஸ்வநாதரின் ஆசிகள் எப்போதும் தன்னுடன் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

இந்த நாட்டில் மூன்று நாட்களாக இருப்பதாக கூறிய மோடி, மக்களின் வாழ்க்கை முறை, உரையாடல் மற்றும் சூழலில் ஒரு “கலாசார நறுமணம்” கமழ்வதை உணர முடிகிறது என்றார். அது இந்தியாவில் நாம் உணரும் அதே நறுமணம் போலவே இருப்பதாகவும், இந்த கலாசார பாரம்பரியமே இருநாடுகளையும் இணைக்கிறது என்றும் கூறி, அதை பாதுகாத்து வைத்துள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.