சென்னை: கிட்னி திருட்டு முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்படும் கல்லூரிகள் மற்றும் மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் நெசவு கூலி தொழிலாளர்களை குறிவைத்து கிட்னி திருட்டு நடந்ததாக கூறப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் சர்ச்சை எழுந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போதைய தவெக அரசு விரிவான விசாரணையை தொடங்கியுள்ளதாக அமைச்சர் கூறினார். முன்னதாக, இதில் தொடர்புடையவர்கள் முன்னாள் அமைச்சர்களாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்திருந்தார்.
ஜூலை 08 அன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கிட்னி திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் கல்லூரிகள் மற்றும் மருத்துவர்கள் மீது நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.





