துருக்கியின் அங்காராவில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்க வருவதற்கு முன், நேட்டோ உறுப்புநாடுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத வாங்கும் ஒப்பந்தங்களை அறிவித்துள்ளன.

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த கூட்டமைப்பு (நேட்டோ) நடத்தும் இந்த மாநாட்டில் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

சமீபத்தில் டிரம்ப், நேட்டோ அமெரிக்க ஆயுதங்களையே அதிகமாக நம்பும் பலவீனமான அமைப்பு என விமர்சித்திருந்தார். மேலும், ஐரோப்பிய நாடுகள் அதிக முதலீடு செய்தால் மட்டுமே அமெரிக்காவும் கூடுதல் முதலீடு செய்யும் எனவும் கூறியிருந்தார்.

இந்த கருத்துகளுக்கு பதிலடி அளிக்கும் வகையில், ஐரோப்பிய நாடுகள் நேட்டோவின் ராணுவ திறனை உயர்த்தும் நோக்கில் அதிநவீன விமானங்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட உபகரணங்களை வாங்க பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்களை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, உச்சி மாநாட்டில் டிரம்ப் கூடுதல் முதலீடுகளை அறிவிக்க வேண்டிய அழுத்தம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.