நீதிமன்ற உத்தரவு
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இந்த உத்தரவை வழங்கினார்.
வழக்கின் பின்னணி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்கை பதிவு செய்தனர்.
கைது மற்றும் விசாரணை
இந்த வழக்கில் அரும்பாக்கத்தை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சம்மன், லுக் அவுட் நோட்டீஸ்
விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில்பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இருவரும் இதுவரை ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்ஜாமின் மனு
இந்நிலையில் செந்தில்பாலாஜி முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கும் அவரது சகோதரருக்கும் நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.





