மஹாராஷ்டிராவில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ள நிலை உருவாகியுள்ளது. ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
பலத்த மழையால் ஹெச்பிசிஎல் எல்பிஜி சிலிண்டர் நிரப்பும் ஆலையில் வெள்ள நீர் புகுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நிரப்பப்பட்டதும் காலியானதும் சேர்த்து சுமார் 3,000 எல்பிஜி சிலிண்டர்கள் பாதாளகங்கா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
ஆற்றில் அல்லது கரையோரத்தில் அடித்து வரும் சிலிண்டர்களை பொதுமக்கள் யாரும் அணுகவோ தொடவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலிண்டர்கள் எங்காவது தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்குமாறு மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், டில்லியிலும் கனமழை காரணமாக பல பகுதிகளில் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. ரிங் ரோடு, அவுட்டர் ரிங் ரோடு, டில்லி–நொய்டா எக்ஸ்பிரஸ்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலை 48 ஆகிய முக்கிய சாலைகளில் தவுலா கான், மகிபால்பூர், ரஜோக்ரி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





