வெலிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி நியூசிலாந்து செல்ல உள்ள நிலையில், இந்தியா–நியூசிலாந்து இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஷன் வரவேற்று, இருநாட்டு வர்த்தகம் வளர்ச்சி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தோனேசியப் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மோடி, அடுத்ததாக நியூசிலாந்து செல்ல உள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நியூசிலாந்துக்கு மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணம் என இது குறிப்பிடப்படுகிறது.
மோடியின் வருகைக்கு முன்னதாக, லக்ஷன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் நியூசிலாந்தின் வர்த்தக வாய்ப்புகளை கணிசமாக உயர்த்தும் என்று தெரிவித்தார்.
மேலும், ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு நியூசிலாந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 57 சதவீதத்திற்கு முதல் நாளிலிருந்தே வரி விதிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.





