தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவின்படி, சிபிசிஐடி டிஐஜியாக பணியாற்றி வந்த வருண் குமார், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த விக்ரமன், சிபிசிஐடி டிஐஜியாகப் பொறுப்பேற்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரகுபதி, பள்ளிக்கரணை சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.





