மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, டில்லி செங்கோட்டையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலை மும்பை போலீசார் உடனடியாக டில்லி போலீசாருக்கு தெரிவித்ததைத் தொடர்ந்து, செங்கோட்டையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் டில்லி போலீசார் செங்கோட்டை வளாகம் முழுவதும் விரிவான சோதனை நடத்தினர்.

சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்காததால், இது வதந்தி என போலீசார் தெரிவித்தனர்.

மிரட்டல் விடுத்த மர்ம நபரை கண்டறிந்து பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.