கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு, முதல்வர் விஜய் நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கும் நிகழ்ச்சி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வருவாய் துறை, ஊரக வளர்ச்சி, காவல் துறை, பதிவுத்துறை, டவுன் பஞ்சாயத்து, சமூக நீதித்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட துறைகளில் பணியிடங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், விஜயலட்சுமி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தலைமைச் செயலர் சாய்குமார், கலெக்டர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒவ்வொருவருக்கும் ஆணை வழங்கும் போது முதல்வர் உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், “அரசுப் பணி வேண்டாம்” என தெரிவித்த ஐந்து குடும்பத்தினரை அழைத்து பேசி, தேவையான உதவி எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேட்குமாறு தெரிவித்தார்.