தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து லஞ்சமாக வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.6.14 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஒரத்தநாடு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், குறுவை தொகுப்பு திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெறும் போது லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

அந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை குழு விடிய விடிய சோதனை நடத்தியது.

சோதனையின் போது ரூ.6.14 லட்சம் பணம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.