வியட்நாமின் பு கியூக் தீவு அருகேயுள்ள கடல் பகுதியில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே படகில் 32 பேர் பயணம் செய்துக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உயிரிழந்தவர்களில் பழனியைச் சேர்ந்த முருகபிரபு (44) என்பவரும் உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெறும் நிலையில் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், சம்பவத்தின் துல்லியமான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறிய தூதரகம், உதவி மற்றும் தகவல்களுக்காக ஹோ சி மின் நகரிலுள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்திலும் ஹனோயிலுள்ள தூதரகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.





