பாஜவில் இருந்து விலகிய அண்ணாமலை தொடங்கிய புதிய இயக்கமான ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அமைப்பின் தகவலின்படி, இதுவரை 19 லட்சம் பேர் இயக்கத்தில் இணைந்துள்ளனர்.
முதல் மாநாடு நாளை பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது.
‘போதை இல்லா தமிழகம்’ என்ற விழிப்புணர்வு தலைப்பில் மாநாடு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்காக பிரமாண்ட மேடை உள்ளிட்ட ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் நடைபெற்று வருகின்றன.




