புதுடில்லி: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், ஜூலை 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ல் தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ‘நீட்’ வினாத்தாள் கசிவு, பெட்ரோல்–டீசல் விலை உயர்வு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.

அனைத்துக் கட்சி கூட்டத்தில், பார்லிமென்ட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.