தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இன்று முதல்வர் விஜய், லயோலா மணிக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உடன் இருந்தார்.
பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட லயோலா மணி, கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்று தெரிவித்தார்.
இதற்கு முன் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக திண்டுக்கல் லியோனி இருந்தார். தவெக அரசு பொறுப்பேற்ற பின்னர் தற்போது லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.





