சென்னை புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்பசாமி நகரில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தொட்டி அமைக்கும் பணிக்காக கிரேன் மூலம் இரும்புக் கம்பிகள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வழியாக விக்னேஷ் தனது 3 வயது மகன் ஷாருக்குடன் சென்றபோது, இரும்புக் கம்பிகள் கட்டப்பட்டிருந்த பெல்ட் அறுந்ததாக கூறப்படுகிறது. இதனால் தூக்கப்பட்டிருந்த கம்பிகள் கீழே விழுந்து குழந்தை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பணிகளில் அலட்சியம் காட்டியதாகக் கூறி ஒப்பந்த மேலாளர் உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.