அயோத்தியிலுள்ள ராமர் கோவில் நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருக்காது என்று, கோவில் கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் வழங்கிய காணிக்கை மற்றும் நன்கொடைகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் கோவில் நிர்வாகம் தொடர்பாக சர்ச்சை உருவானது.

இந்த நிலையில், கோவிலுக்கு புதிதாக நியமிக்கப்படவுள்ள சி.இ.ஓ. நிதி தொடர்பான பணிகளை கவனிப்பார் என மிஸ்ரா தெரிவித்தார்.

மேலும், அந்த சி.இ.ஓ.வின் பொறுப்புகள் மற்றும் அதிகார வரம்புகளை கோவில் அறக்கட்டளையே தீர்மானிக்கும் என்றும், கோவில் நிர்வாகத்தில் அரசு தலையீடு இருக்காது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.