தமிழக அரசு மருத்துவ சேவைகளை டிஜிட்டல் முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ‘நலம் TN’ இணையதள சேவையை முதல்வர் விஜய் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். சென்னை மாநில கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திட்டத்தின் சின்னமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ரூ.139.47 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 86 மருத்துவக் கட்டடங்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் திறந்து வைத்தார்.
‘நலம் TN’ திட்டத்திற்கு பல தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் அமைப்புகள் நிதி ஆதரவு வழங்கியதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட சுகாதாரத் துறையினருக்கு 2,000 பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். இதில் 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மாற்றுத்திறனாளி பிரிவில் தேர்வான ஒரு மருத்துவருக்கு, மேடையிலிருந்து இறங்கி சென்று நேரில் பணி நியமன ஆணையை வழங்கியதும் கவனம் பெற்றது. இந்த நிகழ்ச்சி தினமலர் இணையதளம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில் நேரடி ஒளிபரப்பாக வெளியிடப்பட்டது.





