தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என மீண்டும் வலியுறுத்தி, அதற்கான அதிகாரப்பூர்வ தொடர்பு வழிகளை வெளியிட்டுள்ளது.
முதல்வர் விஜய், “யாராவது லஞ்சம் கேட்டால் தைரியமாக என் பேரைச் சொல்லுங்கள்” என அழைப்பு விடுத்துள்ள நிலையில், எச்சரிக்கைகளையும் மீறி சில துறைகளில் லஞ்சம் கேட்பது தொடர்வதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகார் அளிக்க 94981 80936 என்ற வாட்ஸ் ஆப் எண்ணையும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியையும் DVAC தெரிவித்துள்ளது. மேலும் சென்னை தலைமையக கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-22321090, 044-22321085, 044-22310989, 044-22342142 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.
இதோடு சென்னை தலைமையகம், சிறப்பு புலனாய்வுப் பிரிவுகள் உள்ளிட்ட பல பிரிவுகள் மற்றும் வடக்கு, மத்திய, மேற்கு, தெற்கு மண்டலங்களின் மாவட்ட அலுவலக எண்களையும் DVAC பட்டியலிட்டுள்ளது; அருகிலுள்ள அலுவலகத்தை எளிதில் அணுக உதவவே இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் கேட்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அதிகாரப்பூர்வ வழிகளிலேயே புகார் அளிக்க வேண்டும்; தயங்காமல் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





