சென்னை: ராஜினாமா செய்துவிட்டு ஒரு கட்சியில் இணைவதை “குதிரை பேரம்” என்று சொல்ல முடியாது; அது அந்த நபரின் தனிப்பட்ட முடிவு என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் மாவட்டங்களில் அதிமுக கிளைக்கழகம் வரை அமைப்பு இல்லாமல், மாவட்ட அளவிலேயே கட்சி இருப்பதாக குற்றம்சாட்டினார்.

மேலும், முன்னாள் அமைச்சர்கள் சிலர் சிறிய மேடைகள் அமைத்து குழப்பமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் (எடப்பாடி கே. பழனிசாமி) என்பதையே அவர்களுக்கு நினைவும் நம்பிக்கையும் இல்லை போல இருக்கிறது என்றும் விமர்சித்தார்.

குதிரை பேரம் என்றால் பணம் கொடுத்து ஒருவரை வாங்குவது தான் என்று விளக்கிய அவர், அத்தகைய விவகாரத்தில் யார் சிக்கியுள்ளனர் என்பது தெரியும் என்றும், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

யாரையும் “வாங்க” என்று நாங்கள் அழைக்கவில்லை என்றும், ராஜினாமா செய்து வந்தால் அதை குதிரை பேரம் என்று கூற முடியாது என்றும் அமைச்சர் நிர்மல்குமார் மீண்டும் வலியுறுத்தினார்.