சென்னை: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (ரேரா) தொடர்பான அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை கவனிக்க, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பணீந்திர ரெட்டி தலைமையில் இடைக்கால குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

ரேரா தலைவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவ் தாஸ் மீனா மற்றும் அதன் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பதவி விலகியதைத் தொடர்ந்து, இந்த ஆணையத்தை தமிழக அரசு தற்காலிகமாக கலைத்தது.

இதையடுத்து வெளியிடப்பட்ட அரசாணைப்படி, 3 பேர் கொண்ட இடைக்கால குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பணீந்திர ரெட்டி தலைவராகவும், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி நசீர் அகமது மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரீட்டா ஹரீஷ் தக்கர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழு அடுத்த 6 மாதங்கள் அல்லது தமிழ்நாடு ரேரா மீண்டும் அமைக்கப்படும் வரையில் செயல்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.