புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், தேஜ கூட்டணியின் எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் ஜூலை 21ல் நடைபெறுகிறது.

மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ல் தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெற உள்ளது. இதில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ‘நீட்’ வினாத்தாள் கசிவு, பெட்ரோல்–டீசல் விலை உயர்வு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.

கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க ஜூலை 19ல் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேஜ எம்பிக்கள் கூட்டம் ஜூலை 21 காலை 9.30 மணிக்கு பார்லிமென்ட் வளாகத்தில் நடைபெறுகிறது; இதில் பிரதமர் நரேந்திர மோடி எம்பிக்களிடம் உரையாற்ற உள்ளார்.