நியூசிலாந்தில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல சுற்றுலா தலமான டெ அனாவு பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து நாட்டின் தெற்கு தீவு கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்பும் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறி உயரமான இடங்கள் அல்லது சுனாமி மீட்பு மண்டலங்களுக்கு விரைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது பாதிப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.





