ஒடிசா மாநிலம் புரியில் நடைபெற்ற ஜெகந்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறைந்தது 200 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ரத யாத்திரைக்காக புரி நகரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஊர்வலத்தின் போது கூட்டம் அதிகரித்து நெரிசல் உருவானதால் விபத்து நிலை ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் சிலருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், அவர்களுக்கு இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.





