‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பவர்கள் மற்றும் அதை பாடும் நேரத்தில் இடையூறு செய்பவர்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் புதிய மசோதாவை பார்லிமென்டில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பார்லிமென்டின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20 அன்று தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மசோதாவை தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மசோதா அறிமுகமாகி நிறைவேற்றப்பட்டால், ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதாக கருதப்படும் செயல்கள் மற்றும் நடவடிக்கைகள் குற்றமாக எடுத்துக்கொள்ளப்படும். இதன் மூலம் தேசபற்றை வலுப்படுத்தவும், தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் நோக்கமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, தொடர்புடைய மாற்றங்களுக்கான தேசிய கவுரவ அவமதிப்பு திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





