கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில், ‘போதகர்கள் சுவிசேஷகர்கள் கூடுகை’ என்ற நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் அமைச்சர் வன்னி அரசு கலந்து கொண்டனர்.

ஜாதி, மத வேறுபாடு த.வெ.க.வில் இல்லை என முதல்வர் விஜய் தொடர்ந்து பேசிவரும் நிலையில், இந்த பங்கேற்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கட்சி அடையாளத்துடன் கலந்து கொள்ளக் கூடாது என த.வெ.க. உறுப்பினர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

மேலும், உத்தரவை மீறுவோர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கிறிஸ்துவ சர்ச் மற்றும் பாஸ்டர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் ஆகஸ்ட் 5-ம் தேதி ‘மத போதகர்கள் மாநாடு’ நடைபெற உள்ளது. இதில் சபாநாயகர் பிரபாகர், அமைச்சர்கள் தென்னரசு, குமார், ரஞ்சித்குமார், சரத்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ்குமார், பிரகாசம், பல்லவி ஆகியோர் பங்கேற்க உள்ளதாக விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டு வருகிறது.

முதல்வரின் எச்சரிக்கைக்கு பிறகும் த.வெ.க. தலைவர்கள் மத நிகழ்ச்சியில் பங்கேற்பதாக வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருப்பது, உத்தரவு மீறப்படுகிறதா என்ற விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.