பழநி கோவில் நிலங்களுடன் தொடர்புடைய நில மோசடி விவகாரத்தில் “100 சதவீதம் நடவடிக்கை” உறுதியாக எடுக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழநி கோவில் மோசடி வழக்கின் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார். பல இடங்களில் மோசடி பத்திரப்பதிவுகள் நடந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த வகை முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்றும், பழநி கோவில் நில முறைகேடு விவகாரத்தில் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் அரசு துரிதமாக செயல்பட்டதாக கூறிய அவர், எம்எல்ஏக்களை “வாங்க” முயற்சிகள் தொடர்வதாகவும், அதற்காக வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பணம் பிடிபட்டதாகவும், மேலும் பல இடங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேலும், திருச்சி சிவா மத்திய அமைச்சராவார் என கூறப்படுவது எந்த அடிப்படையில் என்று அவர் கேள்வி எழுப்பினார்.